search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி அனந்தகுமார்"

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல் சாமராஜபேட்டையில் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    பெங்களூரு:

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலமானார். அவரது உடல் பசவனகுடியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அனந்த குமார் உடல் முப்படை விரர்கள் புடைசூழ மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
     
    அங்கு அவரது உடலுக்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்துக்கான பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், மத்திய மந்திரி சதானந்த கவுடா, அசோகா, ஈஸ்வரப்பா, அனுராக் தாகூர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனந்த குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 



    இதையடுத்து தேசிய கல்லூரி மைதானத்திற்கு அனந்த குமார் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் அனந்த குமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

    தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, பிராமண முறைப்படி அவரது இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சாமராஜபேட்டில் மதியம் 3.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    மத்திய மந்திரி அனந்த குமார் உடலுக்கு பெங்களூரில் உள்ள பாஜக தலைமையகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    பெங்களூரு:

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலமானார். அவரது உடல் பசவனகுடியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அனந்த குமார் உடல் முப்படை விரர்கள் புடைசூழ மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    அங்கு அவரது உடலுக்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்துக்கான பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், மத்திய மந்திரி சதானந்த கவுடா, அசோகா, ஈஸ்வரப்பா, அனுராக் தாகூர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனந்த குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.


    இதையடுத்து தேசிய கல்லூரி மைதானத்திற்கு அனந்த குமார் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, அரசு முழு மரியாதையுடன் சாமராஜபேட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படும்.

    வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மோடி, நேற்று இரவு அங்கிருந்து நேராக பெங்களூரு வந்து அனந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.  #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    மத்திய மந்திரி அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. #AnanthKumar #RIPAnanthKumar
    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள தனியார்  மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரம், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் (வயது 59) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அனந்த குமார் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அவருக்கு அரசு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அனந்த குமாருக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, தேசிய கல்லூரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. #AnanthKumar #RIPAnanthKumar
    மத்திய மந்திரி அனந்தகுமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AnanthKumar #RamNathKovind #Modi
    புதுடெல்லி:

    புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மத்திய மந்திரி அனந்த குமார் (வயது 59) காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அனந்தகுமார் மறைவு வருத்தமளிக்கிறது. அனந்தகுமாரின் மறைவு கர்நாடக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது முக்கிய சகாவும், நண்பருமான அனந்த குமார் மறைந்ததால் மிகவும் துயருற்றேன். மிகச்சிறந்த தலைவர் அவர். இளம் வயதில் அரசியலுக்குள் வந்து, சமூகத்திற்காக விடா முயற்சியுடனும் தயவுடனும் பணியாற்றியவர். தனது நல்ல செயல்களுக்காக அனந்தகுமார் எப்போது நினைவு கூறப்படுவார். 


    அனந்தகுமார் மிகச்சிறந்த நிர்வாகி, அமைச்சரவையில் பல்வேறு துறைகளை சிறப்பாக கையாண்டுள்ள அவர், பாஜகவின் மிகப்பெரிய சொத்தாக விளங்கினார். கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்  பாஜகவை வலுப்படுத்துவதற்காக அயராது பாடுபட்டவர் அனந்தகுமார். தனது தொகுதியினர் எப்போது அணுக கூடியவராக அனந்தகுமார் இருந்து வந்தார்” இவ்வாறு தெரிவித்துள்ளார். அனந்தகுமார் மனைவியிடம் தொலைபேசியில் பேசி, அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த சகாவும், எனது நண்பருமான அனந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

    மத்திய மந்திரி சதனாந்த கவுடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனது நண்பர் அனந்த குமார் மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.  

    இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்பட பலர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பாஜகவின் தேசியச் செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அனந்தகுமார் ஆவார். 2014 பாராளுமன்ற தேர்தலில், பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். 1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை எம்.பியாக அனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் 2003 ஆம் ஆண்டு அனந்தகுமார் பொறுப்பு வகித்துள்ளார். #AnanthKumar #RamNathKovind #Modi
    ×